எந்தா எந்நேரமிங்கு வந்தோம் முனது சேயர்
169. (301)
கண்ணிகள்
1. எந்தா எந்நேரமிங்கு
வந்தோம் முனது சேயர்
இற்றைவரைக்குமே பெற்றதயைக் களவற்ற விதத்துடன்
நற்றுதி செய்கிறோம் வந்தாசீர்வாதமருள்
சந்தோஷ
வேளையிதில் வானவர்கள் கோமானே
2. எந்தா எமதிதயம் தந்தோமுன தகமாய்
இத்தரை மீதினில் விந்தையினோடு பிறந்துருவான
பரன் சுதனே இங்கு உந்தனடியாரின் நிர்பந்தம்
அகற்றியருள், ஒரே யோவாவே
3. இந்த சமயத்தில் வந்தே உதவிசெய்யும்
விந்தையுடன் பரமண்டலமீதிருந்துமதாவி
சொரிந்தருள் பெய்திடும் மைந்தருடைய நாவில்
நின்று
நடனம் புரியும், வல்ல பரஞ்சுடரே
4. பேதை அடியார் நித்ய ஜீவன் அடையவென்று
பாதகரோடுறவாடிடவும் பல போதனையா
லீடேறிடவும் செய்த பட்சமுடைய பரிசுத்தா
துணையருளும், பரமசுயாதிபனே.
5. வேதம் விரித்துரைக்க நாதா கிருபை செய்யும்
ஆதரவாயருகே வரவேணும் என் ஆதித் திருச்
சுதனே பரனே என தச்சம் தவிர்த்து நிமிஷத்தில்
இறங்கி வாரும் ஆசைக்கிறிஸ்தரசே
6. தாசரடியாரும்மைக் கூவி வருந்துகிறோம்
ஆசையுடன் விசுவாசமுடன் மிகு பாசமுடன் உனை
நேசமுடன் தொழ ஆவி வரமெனது நாவில்
துதி பெருக அருளும் பரஞ்சுடரே
Comments
Post a Comment