31 May 2018

இரக்ஷண்ய கூட்டம் ஜெயங்கொள்வோம்


152.  இராகம் (இங்கிலீஷ்)                          

1.       இரக்ஷண்ய கூட்டம் ஜெயங்கொள்வோம்
            இராஜ பெலத்தால் போர்புரிந்தால்
            அன்பின் தேவாவியின் பட்டயம்
            சேர்க்கும் பாவியை ஏசுவிடம்

பல்லவி

            நம்புவோம் ஜெயிப்போம் ராஜபலத்தின் போர்புரிந்தால்
            செல்வோம் வெல்வோம் ராஜபலத்தில் போர்புரிந்தால்

2.         சென்ற காலமெல்லாம் ஜெயமே
            எங்குமெதிரியின் கோஷ்டமே
            நாள் முடியு மட்டும் போர் செய்வோம்
            ஆவியின் பலத்தால் வெல்லுவோம்

3.         எதிரிகள் பலம் கொண்டாலும்
            வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்
            ஏசு மன்னவர் ஜெயங்கொள்வார்
            அவரே வழி நடத்துவார்

4.         ஜெயக்கொடியை நாம் உயர்த்தி
            தேவ நாமத்தில் போர் புரிவோம்
            லோகம் பேயை முற்றும் ஜெயிப்போம்
            மீட்பருக்காய் நாம் போர் புரிவோம்

5.         உண்மையாய் மீட்பர் சேனையினில்
            தேவ நாமத்தில் போர் புரிந்தால்
            தீயும் ரத்தமும் ஜெயங்கொள்ளும்
            அவர் பாதத்தை லோகம் சேரும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...