18 May 2018

தேவசுதன் பூவுலகோர் பாவமெல்லாம் தீர


60. இராகம் (சரணம் சரணம் அனந்தா)   (51)

1.       தேவசுதன் பூவுலகோர் பாவமெல்லாம் தீர
            திரு மரணமான செய்கை சிந்தை செய் என்னுள்ளமே

2.         எருசலையில் ஈராறு சீஷருடன் பஸ்கா
            திருவிருந்தை ஆசரித்துச் சென்றவா செத்சேமில்

3.         கெத்சேமில் சீஷர் பதினொருவருடன் சென்று
            கெஞ்சி ஒரு ஜெபமுறையை மிஞ்சி அவர் செய்ய

4.         செய்த நமதாண்டவரின் திருமேனி எல்லாம்
            செந்நிறமாய் சிவந்துடலில் சோந்த ரத்தமெல்லாம்

5.         ரத்தமெல்லாம் வேர்வையதாய் புற்றரையிலோட
            ரட்சகனார் அயர்ந்துடனே குப்புறவே விழுந்தார்

6.         கண்டவுடன் சீஷரோடு கர்த்தர் எதிர் வரவே
            கன்னமதில் முத்தமிட்டுக் காட்டினான் யூதாசே

7.         யூதாசு காட்ட அந்த யூதர் பிடித்துடனே
            யுகம் வனைந்த கரமயையோ மிக நெருங்கக்கட்டி

8.         கட்டிவரும் வழியிற் செய்த நிஷ்டூரமெல்லாம்
            கண்டு கல்லும் உருகிடும் அதை சொல்லவும் நாவில்லையே

9.         நாவினாற் சொலற்கரிய நடபடிக்கை நடந்த
            நாயனைக் காய்பாமனையில் நாட்டமாய் சேர்த்தாரே

10.       சேர்த்த பின்னன்னா காய்பா தேவசுதன் தன்னை
            செய்து நிந்தை மிகுதியல்லோ செருசலையோர் காண

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...