18 May 2018

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா


59. இராகம் (ஏசு துரை சுவாமியை)        (50)

பல்லவி

                   பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

அனுபல்லவி

                        பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்யவென்று

1.         வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து
            அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை         - பந்தி

2.         பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து
            சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே                            - பந்தி

3.         கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்
            கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார்                                  - பந்தி

4.         நானுன்னைக் கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே
            என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன்        - பந்தி

5.         மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்
            என்னைக் காட்டிக்கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்      - பந்தி

6.         பன்னிருசீடர்களும் நானோ நானோ வென்றார்
            காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோரபி என்றான்                     - பந்தி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...