ஏற்றுசிந்தம் ஏகாம்பர சருவேசுரனை


47.         இராகம் (போற்றவாரும் பெத்லேம் நகாமீதினில்)

பல்லவி

                   ஏற்றுசிந்தம் ஏகாம்பர சருவேசுரனை
                   போற்றுமுக்தர் சுயாம்ப்ர கிருபாகரனை

அனுபல்லவி

            சாற்றுமாமறை நூலதார் பேசிய
            ஜகநாதன், குருபாதம் ஒருபோதும் மறவாமல்

1.         பாலரை மார்போடணைத்த சித்திரக்கரன்
            பாங்குபுரிய ஜலமீதில் நடனப்பதன்
            செம்பொன் விளக்கேழின் மத்தியில் நடனம் செய்த
            திருநாதன் திருப்பாதம் திரிகாலம் மறவாமல்

2.         உம்பராயர்கள் புகழும் சிம்மாசனன்
            ஓசன்னாவென்ற சற்பாலர் பண்ணின் பரன்
            செம்பொன் விளக்கேழின் மத்தியில் நடனம் செய்த
            திருநாதன் திருப்பாதம் திரிகாலம் மறவாமல்

3.         கானகமதிற் பசித்தோர்க் கமுதளித்தவன்
            கஸ்தியுற்றோர்கள் நோய் தீர்த்து ரட்சித்தவன்
            ஞான உபதேசம் புரிந்து நேசித்த நம்
            ராஜமகி டேசுரசிகாமணி இயேசரசை

4.         தேவர்கள் எக்காளம் ஊதச் சுப்ரமேகத்
            தேரேறி விண்ணூடு சென்று சம்பிரமாக
            யாவருக்கும் சிங்காசனம் வீற்றுத் தீர்வைசெய்யும்
            ரட்சகனை வச்சிரமணி மெச்சிப்பொரு ளர்ச்சனைசெய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு