இன்னமும் தாமதித்தால் என்னமா யான் பிழைப்பேன்


94. பியாகு                 ரூபக தாளம் (78)

பல்லவி

          இன்னமும் தாமதித்தால் என்னமா யான் பிழைப்பேன்

அனுபல்லவி

                        மன்னவா பிராண நாயகா                      - இன்னமும்

1.         மானிடரை மீட்க வந்த வானராஜனே
            எனதபிமான நேசனே                            - இன்னமும்

2.         பார்த்த பார்வையாலென் கண்களும் பூத்துப்போச்சுதே
            வருகைக் காயத்தமாச்சுதே                  - இன்னமும்

3.         பூமியெங்குமிகுந்த யூதரை சாமி தேடுகிறார்
            அவர் சாலேமுக் கோடுகிறார்                 - இன்னமும்

4.         ராட்சிய மறை நாற்றிசையிலும் சாட்சி கூறுதே
            புதிய காட்சி நேருதே                           - இன்னமும்

5.         பஞ்சம் யுத்தம் நியாயக்கேடுகள் பறந்துலாவுதே
            உலகின் நிறைதுலாவுதே                     - இன்னமும்

6.         அன்பு குளிர்ந்தாவியின் அனல் ஆறிக் காணுதே
            மனம் வேசாரிக் காணுதே                      - இன்னமும்

7.         ஆதிசர்ப்பம் பொரிந்தென்மேல் தன தம்பை எய்யுதே
            உலகம் கெம்பி வையுதே                      - இன்னமும்

8.         காதல்கொண்ட மங்கைக்குன் முகம் காட்டுமேனையா
            மங்கில்யம் பூட்டு மேசையா                   - இன்னமும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு