அப்பா நின் சிந்தமென்று அருமை மகன் கூவினதும்
55. இராகம் (இராக்காலம் காத்தருட) (46)
1. அப்பா
நின் சிந்தமென்று
அருமை மகன் கூவினதும்
அப்பா நின்
சித்தமென்று
அரும்பாடடைந்ததுவும்
2. வானத்திலேயிருக்கும்
வல்லவரின்
தூதனவன்
வையகத்தை
மீட்க வந்த வல்லவரைத்
தேற்றினதும்
3. நெற்றியினால்
வேர்வை சிந்தும்
நீசராம் எங்களுக்காய்
நித்தியனார்
பொன்மேனி
ரத்தமதாய்
பொங்கினதே
4. ரத்தமதாய்
பொங்கி நிற்கும்
நேசர் முகம் பாராயோ
பார்த்தால்
உன் பாவமெல்லாம்
பஞ்சாகுமென்றாரே
5. பாதகராம்
நாங்கள் செய்த
பாதகத்தை
நீர் சுமந்து
தேவ கோபாக்கினையின்
செக்காட்டப்பட்டீரோ
6. செக்கதிலே
ஆட்டப்பட்டீர்
சென்னீர்
வடியவிட்டீர்
தேவ கோபாக்கினையின்
தீயை அணைத்துவிட்டீர்
7. தீயை அவித்ததினால்
தீபாவி மோசமற்றேன்
மோட்சத்துக்காளானேன்
முதல்வா உனின்
கிருபை
8. உன் கிருபை
எண்ணி எண்ணி உன்மேல் நிதம்
உருகி
என் பாவத்தைத்
தள்ள இறைவா துணைபுரியும்
9. பாவத்திலே
நிலைக்கும் பாவியே
உன்னுடைய
பாடு பரிதாபம்
பாழ் நரகுன்பங்காகும்
10. பாழ்நரகில்
பங்கடைய பாருலகில்
ரட்சகரும்
பாடுபட
வந்ததில்லை பார்த்துணர்ந்து
கொள்வாயே
11. பார்த்து
மனதுணர்ந்த
பாவமதை நீ
வெறுத்தால்
பார்த்திபனார்
தன்வலத்தில்
பாக்கியமாய்
வாழ்ந்திடுவாய்
12. வாழ்ந்திருக்கவென்று
வருவார் திருச்சுதனார்
வாழ்ந்திருக்கும்
வேளை தனில்
வாழ்த்திப் புகழ்ந்திடுவார்
13. வாழ்த்திப்
புகழ்ந்திடுவார்
வானோர் புடைசூழ
வாழுவாய்
நீடுழிகாலமெல்லாம்
வாழ்ந்திடுவாய்
- சுவி. தா.
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment