தேவ ஆசனத்தின் முன்னதாகவே ஜீவநாயகரின் சந்நிதியிலே
114. செஞ்சுருட்டி ஆதி தாளம் (95)
1. தேவ ஆசனத்தின்
முன்னதாகவே ஜீவநாயகரின் சந்நிதியிலே
ஓயாப்
புகழ் தூயர் தூயரெனவே ஒன்றாய்ப் பாடுவோம்
2. பாவரோகம் கண்ணீர் யாவற்றோடுமே பாடுநோய் துயரம்
பறந்திடுமே
தேவ கிருபா நதிதீரத்தில் நின்றே தினமும்
பாடுவோம்
3. எண்ணமுடியாத ஏக கூட்டமாய் ஏசுரட்சகரின் சாயல்
தரித்தோர்
வெண்ணுடைதரித்து வேந்தர் எனவே என்றும்
பாடுவார்
4. பூவோர் கண்டிராத மேன்மையுள்ளதாய் பொங்கும்
நீர் பளிங்குபோல் துலங்குமாம்
ஜீவநதியென்னும் ஆற்றின் அழகாம் தீரத்தில்
நின்றே
5. வீதிதன்னில் விளையாடுவோம் நாமே ஜாதிவித்தியாசச்
சாபம் நீங்குமே
நீதிமான்கள் வாழ்வு நித்யமாமங்கே நிதமும்
பாடுவோம்.
Could you tell me who wrote this song?
ReplyDeleteஇப்பாடலை எழுதியது யார் என் தெரியவில்லை!
Delete