பரலோகமே பாக்கியர் வாழும் நாடே
70.
பல்லவி
பரலோகமே
பாக்கியர் வாழும் நாடே
நரலோகமே
நான் உனை நாடுவேனோ
1. ஏசு என்னும் பரலோகமேயல்லாமல்
ஏது பரலோகம் ஏழைக்கு உண்டு
இன்பலோகம் என்
ஏசு முகத்தில்
இலங்குதல்லோ
சொர்க்க நாட்டின் வளம் - பரலோக
2. கிறிஸ்தவ ஜீவிய
சொர்க்கமே உன்னை
கிருபையினாலடைந்த
மகிழ்கிறேன்
சோர்ந்திடும் மக்கள் உன்னில் சுகபெலனடைந்து
ஜோதிப் பிரகாசமாய்
ஜொலித்திடும் நாடே - பரலோக
3. ஆனந்தமே பரமானந்தமாச்சே
அவனியில் துயர் நீங்கச் சமயமுமாச்சே
அப்பன் ஏசு
வருகை அடுத்திடலாச்சே
ஆகா இச்சந்தோஷங்கள் அடியேனுக்காச்சே - பரலோக
Comments
Post a Comment