எங்களன்புள்ள ஏசு தேகத்தை எடுத்துப் பூமியிலடக்கவே
83. (83)
1. எங்களன்புள்ள
ஏசு தேகத்தை எடுத்துப் பூமியிலடக்கவே
சங்கத்தான் யோசேப்புடன் நிக்கோதேமும் தாசரிருவர்
தோன்றினார்
2. சனகரீம் சங்கத் தலைவன் யோசேப்பு சற்குணன்
மகா நற்குணன்
அவன் பொந்தியுப் பிலாத்துவிடம்போய் அங்கத்துக்காக
மனுக்கேட்டான்
3. ஆரம்பத்திலே ஒருநாள் ராத்திரி வந்தானந் நிக்கோதேமுவே
நூறு ராத்தல் கரியபோளமும் வெள்ளைப்போளமும்
கொண்டுபோய்
4. உத்தரம் பெற்றுக் கொண்டுமே அந்த உத்தமன் எங்கள்
ஏசுவை
மெத்தப் பத்திரமா யிறக்கியோர் மெல்லிய
புடவை சுற்றினார்
5. பாரிலோரிட மில்லையே உமக்கு படுக்கக் கல்லறை
இரவலோ
சீருள்ள யோசேப்புடை கல்லரை தேவனே உமக்கேற்றதோ
6. கன்மலையிலே கெட்டியாய் தோண்டி வெட்டப்பட்ட
நற்கல்லரை
இன்னும் ஓர்வனும் ஓர்காலும் வைக்கப்பட்டிராப்
புதுக்கல்லறை
7. தனவான்கள் பெரியோர்களைத்தான் அடக்கஞ் செய்முறைபோல
கனவான் யோசேப்பும் நிக்கோதேமுவும் அங்கத்தை
அலங்கரித்தார்கள்
8. தெய்வத்தின் திருமடியிலே செல்லப்பிள்ளையாய்
நீரிருந்தீரே
வையகத்தை மீட்க மூன்றுநாள் மண்ணறைக்குள்
இருந்தீரே
9. உத்தரம் பெற்றுக் கல்லறையிலே சங்கத்தார் முத்திரை
போட்டார்
பத்திரமாக கையில் வாளுமாய் சேவகர்நின்று
காத்தாரே
10. தேசமெங்கும் நன்மை செய்யவே சென்ற உம் கரங் கால்களும்
மாசற்ற திருமேனியுமிந்த மண்ணில் தங்கிற்றோ
தெய்வமே
Comments
Post a Comment