25 May 2018

சொந்தமான வேந்தனாம் உங்கள் தந்தனேசையா - மனு


105. இராகம் (டரிடம்டிடாரறி)                    (89)

1.       சொந்தமான வேந்தனாம் உங்கள் தந்தனேசையா - மனு
            சந்ததம் பிழைக்க இதோ சொந்தனார் வாரார்
           
2.         சுத்தமான பக்தருக்குள் நித்யமாளிகை - பரி
            சுத்தனேசு துத்யராஜா துத்யனிதோ வாரார்

3.         மோட்ச சேனையாம் பரிசுத்த சாட்சியார் தொழவேரத்தச்
            சாட்சிகளானோர் எழும்பி சூட்சிகன் வாரார்

4.         கானாட்டுக்கரசான எங்கள் கோனார் ஏசையா - இப்
            பூனாட்டாரைக் கூட்டிச் சேர்க்க அவ்வானாட்டார் வாரார்
           
5.         வானதூதர் சேனையோடு மானிடர் நாமும் - பர
            ஞானன் ஏசு சுவாமியாரிதோ வானமேறினார்

6.         அந்திக்கிறிஸ்தெனும் பொல்லாத தொந்தி பெருத்தோனை நூறு
            சந்தாகக் கிழித்துவிடச் சொந்தனார் வாரார்

7.         ஆயிர வருஷமாக ராயனேசு சுதன் - நல்
            ஆயரோடு ஆண்டுபோக ராயர் இதோ வாரார்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...