26 May 2018

என்ன ஆனந்தமோ பரலோக மேன்மை எத்தனை மாட்சிமையோ


113. காமாஸ்                   ரூபக தாளம் (94)

பல்லவி
     
என்ன ஆனந்தமோ பரலோக மேன்மை எத்தனை மாட்சிமையோ
சீயோன் கண்ணே என்ன ஆனந்தமோ

1.         தேவதூதர்கள் கூடி பெண்ணே சிங்காரக்கவி பாடி
            தேவாதி தேவன் பரிசுத்தர் சுத்தரென்று
            ஓயாமல் எப்போதும் உன்னதமாய் பாடுவார்

2.         ரத்தினத்தாலிழைத்த கண்ணே ரஞ்சித மாளிகையொ
            கர்த்தாதி கர்த்தன் கருணை கிறிஸ்தரசன்
            இன்பமுடன் கூடி இருக்கும் ஸ்தலமிதுவோ

3.         மாணிக்கத்தால் சமைத்த கண்ணே ரஞ்சிதமாளிகையோ
            கண்ணினால் நானதை காணுவதெப்போது
            என்றென்றும் ஏசுவோடு மாறாமல் வாழ்க

4.         இன்பச் சீயோனின் கண்ணே நாமிருவரும் சேர்ந்து போவோம்
            இன்பமுடன் காதால்கேட்ட செய்தி எல்லாம்                 
            இக்ஷணமே நாம் பார்க்க எட்டி நடந்திடுவோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...