தேவன் மனிதனான விந்தையைச்
44. இராகம் (தருணத்தில் எனக்குதவி செய்யுமேன்) (255)
பல்லவி
தேவன்
மனிதனான விந்தையைச்
சிந்தித்துக்களிகூருங்கள்
- ஒரு
சிறிய பாலனாக வந்ததை
சேரவந்திதோ பாருங்கள்
அனுபல்லவி
தூதருமே உற்றுப்பார்க்கிறார் - ஒன்றுந்
தெரிந்திடாமலே திகைக்கிறார் - மிகு
தேசுறு மேலோக வாசமகன்று இந்
நீச உலகினில் மேவியே - தேவன்
1. பெத்தலேகேம் நகர் வாருங்கள் - அதில்
சத்திரத்தண்டையில் சேருங்கள்
பத்தியத்தை உற்றுப்பாருங்கள் - யேசு
படுத்திருப்பதைப் பாருங்கள் - கந்தைத்
துணிகளை உடுத்திருக்கிறார் - கனி
பாலகனாய் பெயர் தரிக்கிறார் - என்றும்
கர்த்தத்துவங்கள் பெற்றிடும் நித்திய
சுத்த திரித்துவத்தொன்றவர் - தேவன்
2. சங்கீத கீதங்கள் முழங்குதே - விண்ணில்
எங்கும் எதிரொலி துலங்குதே - அருள்
திங்கள், புவி கதிர் மங்குதே - தூதர்
சங்கம் துதி மொழி வளங்குதே - விண்ணில்
துங்கனுக்கு புகழ் ஸ்தோத்திரமே - புவி
யெங்குமிகு சமாதானமே - மனு
சந்ததி சந்ததமுந் தயவடைந்து
தழைத்துப் பெருகி வாழவே - தேவன்
3. சந்தோஷத்துடன் ஆடுகள் - மிகு
கெம்பீரத்துடன் பாடுங்கள் - நல்ல
சகல வாத்தியம் முழங்கவே - சங்
கீதமெட்டகள் விளங்கவே - ஓகோ
பாவிகளே கலங்காதேயும் - பவ
பாரம் தீர்ப்பவா இவரல்லோ - அதி
பட்சமுற்ற கிறிஸ்து யேசுவின்
பாதத்திற் களிகூறுங்கள் - தேவன்
4. சுருதிமொழிகள் பகர்ந்து - ஒரு
சோர்வுமின்றியே நேர்ந்தது - திரு
அருமைத் தேவன் ரூபமாகிய
அன்புமே பெரிதானது - அந்த
காரம் நீக்கின ஒளியல்லோ - அனை
வருக்குமே தகுமொளியிது - நம
தாண்டவர் சன்னிதியில் நின்று
தோன்றிய பரவொளியிது - தேவன்
Comments
Post a Comment