அனுக்கிரக காலமிதை அசட்டை செய்யாதே


145.  இராகம் (பாவிகளை மீட்கவந்த பரனிவர்தாமே)                    (125)

பல்லவி

          அனுக்கிரக காலமிதை அசட்டை செய்யாதே

அனுபல்லவி

                        மனுக்குலமோ அணுக்குலைய வொண்ணாதே

1.         ஏசு பகவன் வருகை காலமாகுதே
            எங்குமவர் சத்ய ஒளி வீசலாகுதே

2.         இரவு சென்று பகல் வரவு சமீபமாகுதே
            இப்போதே கோடரி வேரருகே தங்குதே

3.         யுத்தம் சத்தம் நித்த நித்த மிச்சமாகுதே
            லோகமெங்கும் பூகம்பங்கள் ஓசையாகுதே

4.         பஞ்சம் பசி பட்டினியும் மிஞ்சிக்காணுதே
            பாரிலெங்கும் கொள்ளை நோய்கள் மீறித்தோணுதே

5.         யூதரேசு நாதர் பாதம் தேடலாகுதே
            யூகமுள்ளோர் ஜீவன் தப்ப ஓடலாகுதே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே