எத்தனையோ காட்சி - சீயோன் நகர்
120. தமிழ்
இராகம் (101)
பல்லவி
எத்தனையோ
காட்சி - சீயோன் நகர்
எத்தனையோ
மாட்சி
அனுபல்லவி
அத்தனார் வாழும் அபரஞ்சிமேடையும்
துத்தியங்கள் நீடும் தூதர்கள் வீணையும்
பக்தியாகப்பாடும் பாவலரோசையும் - எத்தனை
1. பன்னிரண்டு வாசல் அதோரமாய் பளிங்கு நதியோடுது
மின்னொளிக்கற்கள்போல - வீதியெல்லாம் மின்னித்
திகையுது பார்
வச்சிரக்கோட்டையும் வர்ணச்சிறப்பான உச்சிதப்
பேட்டையும் உத்தமர் பாட்டையும்
பேச்சுக்கடங்காத பேரின்பக் காட்சியும்
கண்ணாலே கண்டிடவே என் மானே காதல்கொள்வாய்
மெய்யே - எத்தனை
2. ஜீவநதியோடுது பளிங்குபோல் சிங்காசனத்தின்
முன்னே
ஜீவ விருட்சமொன்று ஈறாறுவித ஜீவகனியுமுண்டு
உச்சித தேசத்து ஓங்கு சூரியனும் பச்சுப்
பச்சென்னும் பளிங்கு தீபங்களும்
நிச்சயமாகவே நிலாவும் வேண்டாமங்கே
மாமனுவேலனங்கே பரஞ்சோதியாய் வீசுகிறார் - எத்தனை
Comments
Post a Comment