31 May 2018

ரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் லோகமடங்க


143.  இராகம் (இங்கிலீஷ்)                      (123)

 

1.       ரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் லோகமடங்க

            நரகாக்கினியைச் சொல்லுவோம் பாவமடங்க
            பூர்வகால தேவதாசர் விஸ்தரித்தாற்போல்
            மோட்சலோகம் போகுமுன்னே

பல்லவி

                        செல்வோம் செல்வோம் ஆர்ப்பரிப்புடனே
                        செய்வோம் செய்வோம் போர்பலத்துடனே
                        ஓ நானாஜாதி பாஷைக்காரர் ரட்சிப்படைய
                        மோட்ச லோகம் போகுமுன்னே

2.         தீதாய் சத்துருக்களென்ன சொன்னபோதிலும்
            சுத்த ஆவியின் பெலத்தைப் பெற்று யாவிலும்
            உண்மையாகப் போர்புரிந்தால் வெல்வோம் சாவிலும்
            மோட்ச லோகம் போகுமுன்னமே

3.         சேனையாரின் யுத்த சத்தம் பூமியெங்கும் கேள்
            மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளுங்கேள்
            முழுலோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்ச நாள்
            மோட்சலோகம் போகுமுன்னே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...