என் செய்வேன் மகனே நான் இதற்கோ உன்னைப் பெற்றெடுத்தேன்
65. காப்பி ஆதி
தாளம் (56)
பல்லவி
என் செய்வேன்
மகனே நான் இதற்கோ உன்னைப் பெற்றெடுத்தேன்
அனுபல்லவி
இறையோ பவச் சோதனையோ இப்படி
முடிந்திட
1. இப்போ நான் வாடிநிற்க இக்கட்டு வந்ததையோ
சிலுவையின் மீதினிலோ ஜீவனும் போகுதையோ
அன்பே முன்பே ஆதரவில்லை ஐயா - என் செய்வேன்
2. நேசன் யோவானையுமே நியமித்தாய் என் மகனே
நின்னையும் நான் நினைத்த நெஞ்சமோ ஆறுதில்லை
நினைவே கனவே நிலையில்லா தலைவேனே - என் செய்வேன்
3. சாவுரு வேளை தனில் சான்றோர்களை நினைந்து
சற்குருநின் போதனையைச் சரிவர சாற்றிவைத்தாய்
கர்த்தா கர்த்தா காரும் என்னையே - என் செய்வேன்
4. ஐயையோ பாலகனே அதிசயமாய் வந்துதித்தாய்
அருமையாய் வளர்ந்திங்கு அவதிக்குள் அமைந்தனையே
அருமைத்திருமைந்தனே வயிரெறியுதையோ - என் செய்வேன்
5. யூதருந்தன் கன்னத்திலடிக்க நீர் துடி துடிக்க
கண்ணினால் பார்த்திருக்க கன்னியோ நானிருக்க
கருவாய் உருவாய் எனில் வந்துதித்தவனே - என் செய்வேன்
6. பாவிகளைத் தேற்ற பாவக்கறை அகற்ற
படுகிற பாடுகளை நான் பார்ப்பேனோ என் மகனே
பலமாய் உரமாய் அடிகள் விழுகுதையோ - என் செய்வேன்
7. கன்னத்திலடிபடவும் கனத்த சிலுவை தூக்கவும்
கள்ளரோடடிபடவும் காலமோ என் மகனே
கருத்தாய் உரித்தாய் கரத்தால் எடுத்தேனே - என் செய்வேன்
Comments
Post a Comment