பொன்னின் கிரீடம் வெண்ணங்கி-வென்றோனுக்கல்லோ


109. ஆனந்தபைரவி (காலமாதாயப்படுத்து)                      ரூபக தாளம்

பல்லவி

          பொன்னின் கிரீடம் வெண்ணங்கி-வென்றோனுக்கல்லோ
          பூட்டுவார் சீயோனின் பாங்கி - நல்ல

அனுபல்லவி

            மன்னன் கிறிஸ்து மணவாளராம் ஏசுராஜன்
            மின்னல் ஒளியாய் வரும் வேளை சமீபிக்குதே

1.         போராட்ட நாட்களிதல்லோ - பகைஞரெல்லாம்
            பொல்லாப்பாய் நிற்கிறாரல்லோ
            மாறாட்டக்காலமிதல்லோ-அன்பு குறைந்து
            மாய்மாலம் பெருகுமல்லோ
            வாறார் கிறிஸ்து இருவாளாயுதம் வீசி
            பேராசைப் பாவிகளை நீற்றுமன்பரின் வாசர்

2.         காலம் கடத்திவிடாதே கண்ணீர் விட்டாலும்
            காண்பாயோ சென்ற நாட்களை
            ஜாலங்கள் செய்து நில்லாதே - மரணம் வந்தால்
            தாமதம் சொல்ல ஏலாதே
            வாலவயதும்மாய்கை மண்ணின் பொருளுமாய்கை
            சீலமுடனே வேத ஆகமம் அதை எடு

3.         துன்பம் முடியப்போகுதே - சுற்றத்தார் செய்யும்
            தொல்லை முடியப்போகுதே
            வம்புகள் நீங்கப்போகுதே - பாவங்கள் யாவும்
            விண்ணில் முடியப்போகுதே
            இன்பம் துவக்கப்போகுதே எங்கும் மகிமையாக
            துங்காதி துங்கர் தொழும் ஜோதியரைப் புகழ்வோம்

4.         முந்தின ஆதாம் மரித்து - கிறிஸ்துவேனும்
            பிந்தின ஆதாம் பிறந்து
            சிந்தின ஜோதியாலே - நம்மை முழுதும்
            திட்டற சுத்திகரித்து
            அந்தி சந்தி மதியம் எந்த நேரமும் ஜெபம்
            புத்தியுடனே செய்து கெஞ்சி மன்றாடி நிற்போம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு