கண்டேன் பரமகாட்சி கார்மேகத்தில்


108. இராகம் (பார்ப்பேன் என் ராஜாவை)  (283)

பல்லவி

            கண்டேன் பரமகாட்சி கார்மேகத்தில்
          கண்டேன் பரமகாட்சி

அனுபல்லவி

1.         வானம் மடமடெனவே தாழ்ந்த வைய கிடுகிடெனவே
            முதல் தூதரும் மும்முரமாக செற்றார் வூர் புகழும்          
            துந்துமி தாளங்களுடன் விஞ்சையர் இரங்கி வர

2.         சூரியன் மறைந்திடவே சிறிய சந்திரன் சிவந்திடவே
            உயர் நட்சத்திரக்கணங்கள் நடுங்கி அதிர்ந்து விழ
            திம் திம் திம் திம் திம் திம்மென தேவசங்கம் சாய்ந்துவர

3.         சேனை அதிபதிமுன் சகல சேராபீன் கூட்டங்களும்
            வெகு வீரமாக வெற்றிச் சிலுவைக்கொடி பிடித்து
            பும் பும் பும் பும் பும் பும்மென மேளதாளத்தோடு வர

4.         காபிரியேல் மிகாவேல் அவருட தூதர் குழாங்களோடு
            கனக மகுடமுடி கெம்பீர கீதமுடன்
            டிண் டிண் டிண் டிண் டிண் டிண்ணோசையோடு ஜீவ புஸ்தகம் ஏந்தி வர

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு