காலம் ஆதாயப்படுத்து உனது ஜீவன்


135. துசாவந்தி                    ஆதி தாளம் (115)

பல்லவி

                   காலம் ஆதாயப்படுத்து உனது ஜீவன்
                   கடலின் அலையின் துரும்பு சிநேகிதா

அனுபல்லவி

          வாலவயது மங்கைப்பருவம் நடுவயது
            சாலச்சிதைக்குமந்தச் சங்காரன் வருமுன்னே - காலம்

1.         இந்தவருடமெவர்கள் பிழைத்திடுவர் எவர்கள் மரித்திடுவர்கள்
            தொந்தமாம் நரைதிரையோ துளிரோ எனச்சொல்லும் செயலெனக்கில்லை
            அந்தந்த வருடம் அநேகர் மடிந்தனர்கள்
            இந்தச் சத்தியமொன்றே எனக்குத்தெரியுமப்பா - காலம்

2.         குற்றவாளியைப்போல் இவ்வருடத்தில் குறித்த தினமொரு நேரம்
            சற்றே தாமதமுமின்றி உந்தன் முடிவு சடுதியாயிருக்குமென்றால்
            அவற்றை நான் வருவதற்கு காயத்தம் பண்ணினாயோ
            சிற்றின்பத்தில் மகிழ்ந்துஜீவனைப் போக்கிடாதே - காலம்

3.         ஜீவன் முடிந்தபிறகு மனந்திரும்பச் செயலிருக்குமென் றெண்ணாதே
            ஆவென்று திறந்திருக்கும் அகலக்குழி அப்புறம் திறவாதே
            யாவரையுமெழுப்பும் எக்காள சத்தமொன்றே
            நல்லார் பொல்லார்களை நியாயத் தீர்ப்புக்கெழுப்பும் - காலம்

4.         செங்குத்து மலைமேலே நடக்கிறவன் சிரித்து விளையாடுவானோ
            சிந்தை மயங்கியேனோ உந்தன் காலத்தை ஜெபமின்றிப் போக்குகிறாய்
            சங்கவானவரோடு சங்கீத ராகம்பாடி
            சிங்காசனத்திருக்கும் ஜேசுடன் வாழவென்றால்             - காலம்

5.         இப்போதே இரட்சண்ணியநாள் இது தவறில் எப்போதும் கிடையாது
            அப்புறங்கடந்தவெள்ளம் அணுகிவர அழுதும் திரும்பாது
            தப்பாது ஏசுபதம் தாழ்ந்து சரண்புகுந்தால்
            ஒப்பற்ற மோட்சவாழ்வு உனக்கும் கிடைக்குமப்பா         - காலம்          

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு