16 May 2018

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே


48.         பியாகு                         ஆதிதாளம் (39)

பல்லவி

          ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே
            தாவீதின் குமாரனுக்கு உன்னதத்தில் ஓசன்னா

சரணங்கள்

1.         சின்னமறி மேலே ஏறி அன்பர் பவனி போனார்
            இன்னுமவர் என்னகத்தில் வந்து அரசாளுவார்                       - ஓசன்னா

2.         முன்னும் பின்னும் சாலேம் பாலர் இன்பமாகப் பாடினார்
            அன்று போல இன்றும் நாமும் அவர் துதி பாடுவோம்.     - ஓசன்னா

3.         குருத்தோலை ஞாயிறில் நாம் குருபாதம் பணிவோம்
            திரு அருள் ஆவி பெற்று திரியேகரைப் போற்றுவோம்.  - ஓசன்னா

4.         பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
            பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.                  - ஓசன்னா

5.         பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
            ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம். - ஓசன்னா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...