ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி


61. கெவுளி பந்து                         அட தாளம் (52)

1.       ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
            வேதம் புரிந்தென் சிறை விடுத்தீரோ பரனே

2.         ஏவை பறித்த கனியினால் வளைந்ததெல்லாம்
            பாவத்துக்காக பலியானீரோ பரனே

3.         வேதகற்பனை யனைத்தும் மீறி நரர் புரிந்த
            பாதகம் தீரப் பாடுபட்டீரோ பரனே

4.         தந்தைப் பிதாவுக்கும்மை தகனபலியளித்து
            மைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே

5.         சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழ
            கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே

6.         வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்ற
            சிலுவை சுமந்திரங்கித் திகைத்தீரோ பரனே

7.         சென்னியில் தைத்த முடி சிலுவையின் பாரத்தினால்
            உன்னியழுந்தத்துயர் உற்றீரோ பரனே

8.         வடியும் ரத்தங்களோடு மறுகித் தவித்து வாடி
            கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

9.         வானம் புவி படைத்த வல்லமைப் பிதாவின் மைந்தா
            ஈனக்கொலைஞர் கையால் இறந்தீரோ பரனே

10.       சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
            பங்கப்பட்டு மடியப்பட்டீரோ பரனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு