தேவாசனப்பதியும் சேனை தூதரை விட்டு
50. காம்போதி ஆதி
தாளம் (41)
1. தேவாசனப்பதியும்
சேனை தூதரை விட்டு
தேவர் குலமாய் வாரதாரையா? இவர் தேவனுரைப்படி
பாவ வினைப்படி
ஏவை மனப்படி, ஆவல்மிகப்படி வணங்கும் ஜெகஜோதிப்
பொருள் தானையா
2. முன்னணி பின்னணியிலோசன்னா! ஓசன்னாவென
ஓர் மறியின் மீதில் வாரதாரையா? இவர் உத்தமனேசனாம்
சத்திய போசனாம், பக்தரின் வாசனாம், நித்திய ஈசனாம்
உன்னதத்தின் மேன்மைத் தெய்வம் தானையா
3. வழியில் மரக்கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? - இவர்
வல்லவராங்குரு, சொல் தவறாக்குரு, நல்லவராங்குரு,
துல்லிப சற்குரு, வரமிகுந்த சற்குருநாதனையா
4. பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? - இவர்
பசியற்றிருந்தவர், புசிப்பற்றிருந்தவர்,
வசையற்றிருந்தவர், அசைவற்றிருந்தவர்,
பாவ விமோசன ராஜன் தானையா
5. சீயோன் குமாரியிடம் நேயமதாகத்தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? - இவர்
சீருற்றதிபனாம், பேர்பெற்றிறைவனாம் பாருற்றதிபனாம்,
வேருற்றெழுந்தனாம்,
சீவ வழி சொல்வரிவர் தானையா!
6. எருசலேம்
வீதி வழி பெரிய திரளுடனே குருத்தோலை வீச வரதாரையா? - இவர்
அரிவை பவமற, பெருமை நிதந்தர, கிருபை துரந்தர,
அருமை நிரந்தர
ஏசுக்கிறிஸ்தென்றவர் தானையா
Comments
Post a Comment