தாகமானீரோ ஏசுதற்பரா சுவாமி
67. இராகம் (உந்தன் ஆவியே சுவாமி)
5-ம் வார்த்தை
பல்லவி
தாகமானீரோ
ஏசுதற்பரா சுவாமி
தாரணியோர் மேல் கடும் தாகமானீரோ
சரணங்கள்
1. நித்திய ஜீவநதி நீரூறுணியே
நீசக்குருசில் சுவாமி தாகமானீரோ - தாக
2. கடற்காளானோ கடும் காடியே உமக்
கான மானுகும் நல்ல கர்த்தனே சுவாமி - தாக
3. பாவியடியேன் உம்மில் பாச நேசமாய்
ஞான தாகத்தில் வெகு நாட்டங்கொண்டீரோ - தாக
4. நாவும் வறண்டு மெல்நாவோடே ஒட்டி
யாவும் இருண்டுவரத் தாகமானீரோ - தாக
5. பாவிகள் திவ்விய மோட்ச பாக்கியம் சேர
பாடுகள் பட்டு சுவாமி பாரக்குருசில் - தாக
6. தேவ வசன ஞான திவ்விய பாலில்
தேட்டமாய் நானும் என்றும் தின்று பருக - தாக
7. உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள - தாக
Comments
Post a Comment