ஏலி ஏலிலா மா சபக்தானி


66. செஞ்சுருட்டி                         ஆதி தாளம்  (57)

4-ம் வார்த்தை

பல்லவி

                   ஏலி ஏலிலா மா சபக்தானி
                        சால மெஞ்ஞானி சர்வத்தைத் தியானி

சரணங்கள்

1.         நேச குமாரன் என்று சொன்னீரே
            பாசமில்லையோ பரம செங்கோலா                     - ஏலி

2.         பலர் படும் பாட்டை ஒருவர் சுமந்தால்
            நிலைக்குமோ தேகம் நிமிஷ நேரம்                  - ஏலி

3.         இறுக்குது தொண்டை இடிக்குது மண்டை
            நொறுக்குது நோவு பொறுக்க ஏலாது                  - ஏலி

4.         மகனையும் மறக்க மனமும் வந்ததுவோ
            ஜெகத்தோர்க்காய் வந்த தன் பலனிதுவோ         - ஏலி

5.         பாவிகள் படும்பாடு போதாதோ
            காவலனீரும் கைவிடலேதோ                           - ஏலி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு