பாதகனாய் நானலைந்தேன் பாவி என்றுணராதிருந்தேன்


53. சிங்கள இராகம்                            (44)

1.       பாதகனாய் நானலைந்தேன் பாவி என்றுணராதிருந்தேன்
            தத்தளிக்கும் ஏழை வந்தேன் சத்தியரே யாவும் தந்தேன்

2.         மன்னா உந்தன் விண்ணைவிட்டு மண்ணில்வந்து பாடுபட்டு
            மரித்தடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தீர் என்னை மீட்டு

3.         உந்தன் பாடு கஸ்தியாலாம் வந்ததெந்தன் பாக்கியமெல்லாம்
            இம்மை செல்வம் அற்பப்புல்லாம் உம்மைப்பெறவிட்டே னெல்லாம்        

4.         சிரசுக்கு முள்ளால் முடி அரசின் கோல் நாணல் தடி
            நீர் குடிக்கக் கேட்டால் ஒடி ஒர் பாதகன் தந்தான் காடி

5.         கெத்சேமனே தோட்டத்திலே கஸ்திப்பட்ட என் அண்ணலே
            சொந்த ஜனம் நாங்களாக வந்துபட்டீர் பாடுமிக

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு