ஐயோ என் செல்வச்சீராள சிகாமணியை
64. செஞ்சுருட்டி சாப்பு
தாளம் (55)
3-ஆம் வார்த்தை
1. ஐயோ என் செல்வச்சீராள
சிகாமணியை
சிலுவையில்
மடிய விட்டு - ஓகோ
கொடுமையாய் அடிமை நான் குவலயமீதினில்
கூவென்றலறி
நிற்கின்றேன்
2. பெற்றதில்லையென்று பெண்கள் நகைத்தாலும்
பேதை துயரில்லையோ - ஓகோ
பெற்றதினால் மெத்தப் பெருந் துயர் வாதைகள்
பெரிதாயடையலாச்சோ
3. பாரினில் உள்ள பெரியோரின் பெண்களும்
பார்த்தெதிர்
காத்திருக்க - ஓகோ
பாவி என் வயிற்றினில் பெரும்பாடடைவோ
பரனார்
வந்துதித்தார்
4. அன்று சம்மனசு கிருபை பெற்றவளென்றார்
இதுவோ
கிருபையம்மா - ஓகோ
அன்று சிமியோன் சொன்ன மொழி தவறாமலே
வந்து
பலித்ததுவே
5. மூன்றரை ஆண்டாக முக்கிய நன்மைகள்
மிகப்பெற்ற
யூதாசே - ஓகோ
முப்பது வெள்ளிக்காய் முத்தமிட்டு அங்கே
மூர்க்கரைக்
கூட்டி வந்தாய்
6. ஐயோ பிலாத்துவே அநியாயத் தீர்ப்பிட்டாய்
ஆறுமோ
என் மனது - ஓகோ
பரபாசை விட்டுப் பின் பரனைக் குருசறையக்
கரமது
கழுவினையோ
7. எருசலேம் வீதியில் குருசோடு சென்ற என்
செல்வக்
குமாரனெங்கே - ஓகோ
எருசலேம் மாதரே என் இயேசு நாதரை
இங்கு
வரக் கண்டதுண்டோ
Comments
Post a Comment