18 May 2018

பாடுபட்ட ஏசையா பாட்டுபலன் தா ஐயா


54. காப்பி                                  ஆதி தாளம் (45)

பல்லவி

          பாடுபட்ட ஏசையா பாட்டுபலன் தா ஐயா

அனுபல்லவி

         கேடுகெட்ட மானிடர் மேல் கிருபை பரிபாலித்தாய்


1.         கள்ளனைக் கண்பார்த்து விண்ணில் சேர்த்த கருணகரா
            சொல்லி முடியாத பாவம் செய்த கள்ளன் நானையா

2.         மறுதலித்த சீடனுக்கு மாப்புச் செய்த ஆண்டவா
            பொறுதிவைத்தென் பாவமுற்றும் போக்கியருளப்பனே

3.         கொன்ற பொல்லா யூதருக்காய் மன்றாடினையே மெய்யாய்
            நன்றிகெட்ட பாவி எந்தன் ரண்டகங்கள் தீரையா

4.         முட்கிரிடம் தாங்கி ஜீவ பொற்கிரீடம் வாங்கினாய்
            துட்டனெனக்கும் ஒர் சிறு பொற்கிரீடம் தா ஐயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...