அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடி


52. பியாகு                              ரூபக தாளம்  (43)

1.       அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடி
            மன்னவனார் நமக்காக தம்மை பலியிடப்போறார்.

2.         இன்னும் என்ன செய்யப்போறார் கன்னியரே சோரி சிந்த
            என்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி.

3.         பன்னிரு சீடர்களில் பண ஆசை கொண்ட யூதாஸ்
            மன்னர் புகழ் தேசிகரை காட்டிக்கொடுக்கத் துணிந்தான்.

4.         ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டி
            தேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார்.

5.         பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று தானுடுத்தி
            பேதக ஏரோதே அவன் பேசிப் பரிகாசம் செய்தான்.

6.         குப்புற விழுந்தே துயர் அற்புதனடைந்தாரடி
            எப்பொருளான திரியேக வஸ்து நமக்காக

7.         கொல்கதா மலைதனிலே குருசதிலே தான் மரிக்க
            கோதில்லா நீதிபரன் போறார் அதோ பார் சதியே

8.         பாரச்சிலுவை சுமந்து பாதகரோடே நடந்து
            போற துயரறிய பொங்கி மிக மனம் நொறுங்கி

9.         வாசகன் ஏசு திருபாடுகளைத் தானுணர்ந்து
            நேசமதாய் தாசர்களும் சாற்றித்துதி பாடிடவே             

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு