வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்
தப்பிற்று
நமது ஜீவன் - 2
மகா உன்னதர் எல்லாம் வல்லவர்
மறைவிலே
நாம் வாழ்கின்றோம் - 2
அல்லேலூயா
ஆனந்தமே
அல்லேலூயா
பேரின்பமே - 2 - வேடரின்
1. அறுந்தே
போனது எதிரான கண்ணி
தப்பினோம்
தகப்பன் தயவால் - 2
இயேசுவின்
இரத்தத்தால் நீதிமான் ஆனதால்
எதிரி
மேற்கொள்ள முடியவில்லை - 2 - மகா உன்னதர்
2. எதிரியின்
பற்களுக்கு இறையாகாமல்
விடுவித்த
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - 2
கர்த்தர்
நம் சார்பில் எப்போதும் இருப்பதால்
பெருவெள்ளம்
மூழ்கடிக்க முடியவில்லை - 2 - மகா உன்னதர்
3. வானமும்
பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே
நம் சகாயர் - 2
கர்த்தரின்
நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான்
ஓடி சுகம் பெறுவான் - 2 - மகா உன்னதர்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment