அரசனைக் காணாமலிருப்போமோ?
36. மாஞ்சி ஆதிதாளம்
பல்லவி
அரசனைக் காணமலிருப்போமோ?-நமது
ஆயுளை
வீணாகக் கழிப்போமோ?-அரசனை
அனுபல்லவி
பரம்பரை
ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்
பாடனு
பவங்களை ஒழிப்போமோ?-யூத - அரசனைக்
சரணங்கள்
1. யாக்கோபிலோர்
வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்
ராஜ
செங்கோலெங்கும் கதிக்குமென்றே[1],
ஆக்கமிழந்து
மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன்
மொழிபொய்யாத பாக்கியமே!-யூத - அரசனைக்
2. தேசோ
மயத் தாரகை[2] தோன்றுது
பார்!-மேற்குத்
திசை
வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக்[3] காண நன்கொடைகள்
கொண்டே-அவர்
பொன்னடி
வணங்குவோம், நடவுமின்றே!-யூத - அரசனைக்
3. அலங்காரமனை
யொன்று தோணுது பார்!-அதன்
அழகு
மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர
சங்கிருக்கும் நிச்சயம் பார்!-நாம்
எடுத்த
கருமம் சித்தியாகிடும் பார்!-யூத - அரசனைக்
4. அரமனையில்
அவரைக் காணோமே!-அதை
அகன்று
தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த
உடு[4] அதோ! பார்
திரும்பினதே,-பெத்லேம்
வாசலில்
நமைக்கொண்டு சேர்க்குது பார்!-யூத - அரசனைக்
5. பொன்
தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே,-ராயர்
பொற்கழல்
அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன்
ஏரோதைப் பாராமல்,-தேவ
வாக்கினால்
திரும்பினோம் சோராமல்,-யூத - அரசனை
- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்
No comments:
Post a Comment