பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா
பிரார்த்தனை
கேட்கணும்
என் அன்பு இயேசப்பா
கண்ணீரின் ஜெபத்திற்கு
பதில் தாங்க இயேசப்பா - 2
தாங்கப்பா இப்போ தாங்கப்பா
- (2)
தாங்கப்பா பதிலை தாங்கப்பா
- (2) - பிராத்தனை
1. எலியா என்னை கேட்டருளும்
என்று ஜெபித்தாரே
எளியவன் நானும் இன்று
ஜெபிக்கின்றேனப்பா
- 2 - தாங்கப்பா
2. ஆகாரின் அழுகைக்கு
பதில் கொடுத்தீங்க
அடிமையின் கதறுதலுக்கு
செவி சாய்ங்கப்பா
- 2
3. பர்த்திமேயு கூக்குரலை
கேட்டீங்களேயப்பா
என் பரிதாப நிலையையெல்லாம்
மாற்றுங்களேயப்பா
- 2
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment