புதிய வானம் புதிய பூமி என்னில்
புதிய வானம் புதிய பூமி
என்னில் தோன்றட்டுமே
பழைய
வானமும் பழைய வையமும்
என்னில்
மறையட்டுமே - 2
புதியனவாக்கும்
புதியனவாக்கும்
வல்லமை
வார்த்தையால் புதியனவாக்கும் - 2 - புதிய
1. ஏமாற்றம்
பொய்கள் வஞ்சக கபடுகள்
என்னில்
அகற்றி ஆசீர்வதியும் - 2
இஸ்ரேயல் என்ற புது பெயர் சூட்டி
புதிய
வாழ்வினை நான் காண - (2) - புதியனவாக்கும்
2. குடிவெறி
களியாட்டம் சண்டைகள் பகைமைகள்
ஊனியல்புகள் மறைந்து போக - 2
ஆவியின்
கனிகள் கொடைகள் அருளி
புதிய
பாதையை பின் தொடர - (2) - புதியனவாக்கும்
3. புது
ரசம் புது உடை புது உடன்படிக்கை
புதிய
படைப்பாக அனுதினம் வாழ - 2
புது
உள்ளம் புது உடல் புது ஆவி அருளி
புதிய
கிருபையில் நான் வாழ - (2) - புதியனவாக்கும்
Comments
Post a Comment