புத்தியாய் நடந்து வாருங்கள்-1

புத்தியாய் நடந்து வாருங்கள் திரு வசனப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

268. இராகம்: துஜாவந்தி                                    ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          புத்தியாய் நடந்து வாருங்கள்;-திருவசனப்

            பூட்டைத் திறந்து பாருங்கள்.

 

                             அனுபல்லவி

 

                        சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,

                        நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

 

                             சரணங்கள்

 

1.         ஒன்றான பிதாவின் மக்களே;-கிறிஸ்தின் ரத்தத்

            தொன்றுடன் சகோதரர்களே,

            குன்றாத சுதந்தரர்களே-நீங்கள் எல்லாரும்

            கோதில்லாத[1] நீதிமான்களே;

            சண்டாளப் பசாசின் மக்கள் தங்களைப்போல் வாதுபண்ணிக்

            கொண்டுதிண்டு முண்டு செய்தால், கூற என்ன நீதி உண்டு;-புத்தி

 

2.         அன்பு கூர்ந்திருக்கச் சொன்னாரே,-கிறிஸ்து நமை

            ஐக்கியமாய்ப் போகச் சொன்னாரே;

            இன்பமாய் நடக்கச் சொன்னாரே;-ஆவியில் ஒன்றாய்

            இசைவாகப் பேசச் சொன்னாரே;

            பண்பிலா மிருகம் போலும், பாயும் பேயின் மக்கள் போலும்

            துன்பம் பொய்கள் வன்மம்[2] பகை தூஷணம் செய்யாமல் நல்ல - புத்தி

           

3.         ஆருடைய பிள்ளைகள் நீங்கள்?-திரு உரையில்

            அறிந்து உணர்ந்து பாருங்கள்;

            சீருடைய தெய்வப் பிள்ளைகள்-நீங்கள்; ஏதிந்த

            தித்தரிப்பு[3] செய்யும் வகைகள்?

            கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்

            நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி

 

4.         ஆவியை அடக்காதிருங்கள்;-மறை சொல்லுவதை

            அசட்டை செய்யாமல் பாருங்கள்;

            ஜீவனை அடையத் தேடுங்கள்;-ஏசுக் கிறிஸ்தின்

            சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;

            மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு

            தாவி, ஏசுவைப் பிடித்து தளரா நடையோ டுன்னிப்[4] - புத்தி

 

5.         ஜாதி பேதம் சொல்வர் அல்லவோ? கிறிஸ்தவர்கள்

            தாமே தெய்வ ஜாதி அல்லவோ?

            நீதி பரிசுத்தர் அல்லவோ? மகிமையுள

            நேசம் மிகு ராஜர் அல்லவோ?

            வேதனை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு, மறை

            ஓதியபடி[5] எல்லாரும் உத்தம கிறிஸ்தோராகப் - புத்தி

 

6.         பொக்கிஷத்தை எங்கே வைத்தீர்கள்?-பரத்தில் வைத்தால்

            பூரண பலன் அடைவீர்கள்;

            கக்கிச[6] வழியே செல்வீர்கள்-கடைசியிலே

            கண்டு ஜீவனை அடைவீர்கள்;

            முக்கியமாய் எதைத்தேட முன்னவன் சொன்ன சொற்படி,

            மெய்க்கிறிஸ் திருப்பிடத்தின் மேலானதை நாடித் தேடிப் - புத்தி

 

 

- மரியான் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] குற்றமற்ற

[2] தீராப்பகை

[3] உபாயம்

[4] நினைத்து

[5] கூறியபடி

[6] கடினம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே