பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்
448.
பல்லவி
பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்
சேனை
வீரர்கள் நாம், சேனை வீரர்கள் நாம்
சிலுவை
தோளில் சுமந்து போகலாம்-சேனை
சரணங்கள்
1. நம் தேவன் சமாதானப் பிரபுவே,
நம் சர்வாயுத வர்க்கம் தாழ்மை தானே
நம் ஆத்ம சகாயர் அவரே - சேனை
2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்
எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்
இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்
- சேனை
3. இயேசுவின் அன்புக்காய் இறந்திடுவோம்
புல் பூண்டுமேயானாலும் புசித்திடுவோம்
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் -
சேனை
YouTube Link
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment