பிலிப்பும் சின்ன யாக்கோப் பென்னும்
89. இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ரூபகம்
பரி. பிலிப்பு, பரி. யாக்கோபு திருநாள் - மே முதல் நாள்
“தருணம் இதில் அருள்செய்” - என்ற மெட்டு
பல்லவி
பிலிப்பும் சின்ன யாக்கோப் பென்னும்
பெரியார்
திரு நாள் தானிது
பேணும்காட்சி
தோணும் தவம்
பிடியும்பதம்
படியும்.
அனுபல்லவி
வலிப்ப
முடன் கிறிஸ்தே பிதா
வரக் காண்பியும்
மறக்கே னென
உரைக்க இயேசு விரைக்க பலர்
சிரிக்க வகை புரிந்தா னந்த - பிலிப்பும்
சரணங்கள்
1. ஐந்தப் பமும் இரு மீனையும்
அடைந்த பையன் உடந்தை போல
அருகே யிவன்
வருக குரு
பெருகச் செய்த தறிவோம்
விந்தைக் கிரேக்கர்
நின்றே சுவைக்
காண யிதோ வந்தோ மென
விளிக்க யிவ னழைக்க இயேசு
களிக்க செய்த
வொழுக்கம் பாரும் - பிலிப்பும்
2. பிரிகி யாவின் திசையி லவன்,
பிரசங் கங்கள் முரச மொடு
பெய்ய மக்கன்
உய்ய பல,
பேயின் கிரியை நைய
திருகிப் பலர்
மருகி யொரு,
சிலுவை தனி லறைந்தே
கொல்ல
ஐராப் போலி
யெனுமாந் தலம்,
அடக்கம் செய்தான் நாத்தா
னியேல் - பிலிப்பும்
3. அல்பே யுவின் மகனே மரி,
யனையே யாக்கோப் தாய் தந்தையர்
ஆதிச் சபை இயேசு
சகோ,
தரனே யென வழைத்தார்!
மல்போ ரிடும் யூத ரோடு,
புற சாதியார்
சபையே சேர
வகையே செய்து
பகையை வென்று,
வைத்தா னிந்தச் சித்தா னந்தன் - பிலிப்பும்
4. எருசா லேமின் கண்கா ணியாய்,
இருந்துநிரு
பமுமே செய்து
என்றும் சபை நின்றும் வர,
இருந்தான் பெருந்தூணாய்
மறுலோகமே புகவே யந்தப்,
பரிசே யர்கள் பழிவாங் கினர்
மார்க்கம் பெரிதாச்சு
யிது,
தீர்க்கமான பேச்சுச் சொன்னேன் - பிலிப்பும்
- S. உவால்டர் கவிராயர், தென்மலை.
Comments
Post a Comment