பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

                        திரித்துவ தேவனை துதித்திடுவோம் (2)

 

1.         நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்

            சேரக் கூடாத ஒளி தனில்

            மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்

            பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம்

 

2.         பாவத்தின் கோர பலியான

            சாபங்கள் தன்னில் ஏற்றுக் கொண்டு

            பாவிகளுக்காய் ஜீவன் தந்த

            தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

 

3.         வல்லமையோடு வந்திறங்கி

            வரங்கள் பலவும் நமக்கீந்த

            ஆவியின் வழியை தினம் காட்டும்

            பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

 

4.         அனல் போல் சோதனை வந்தாலும்

            அக்கினி ஊடாய் நடந்தாலும்

            சோதனை நம்மை சூழ்ந்தாலும்

            ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்

 

5.         வானவர் விரைவில் வந்திடுவார்

            வாரும் என்றே நாம் அழைப்போமே

            வானவருடன் சேர்ந்திடும் நாள்

            விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே