12 May 2025

பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்

பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்

          இதைத் தியானியே.

 

                             சரணங்கள்

 

1.         பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்

            பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்

            மானிடனாக அவதரித்த தெய்வீகன்

            வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். - பாவி

 

2.         தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய

            தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய

            தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி

            துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய. - பாவி

 

3.         இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?

            இல்லையானால் உமது இஷ்டமதென்றே

            சிந்தை துயரடையச் செப்பினார், அன்றோ

            சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ! - பாவி

 

4.         கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே;

            கேவலமான உன்தன் பாவத்தை மறவே;

            ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே;

            அன்பின் கரத்தாலுனை அணைப்பார், நிச்சயமே. - பாவி

 

 

- தேவசகாயம் உபாத்தியாயர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...