பிதாவே உம்மை ஆராதிப்பேன்
பிதாவே
உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
தேவனே உம்மை ஆராதிப்பேன்
ஆவியே உம்மை ஆராதிப்பேன்
1. நான் தள்ளாடி நடந்தேன் இடறவில்லை
என்னை தாயைப் போல் காத்தது கிருபையல்லோ
2. நான் வழி அறியாமல் திகைத்து நின்றேன்
நானே வழியும் சத்தியமும் ஜீவன் என்றீர்
3. நான் பயந்து சோர்ந்த நேரமெல்லாம்
உந்தன் கோலும் தடியும் என்னை தேற்றினதே
4. நான் தனிமையில் வாடி தவிக்கையிலே
நீர் என்னோடு இருப்பேன் என்று சொன்னீரே
5. நான் தேவனின் பரிசுத்த ஸ்தலமதிலே
அனுதினமும் மகிழ்ந்து துதித்திடுவேன்
Comments
Post a Comment