பாவியே உனைத்தானே தேடித் துயர் மேவினார்
412. இராகம்: அம்சதோனி. தாளம்: ஆதி.
பல்லவி
பாவியே
உனைத்தானே தேடித் துயர் மேவினார்;
சரணங்கள்
1. பரம சீயோன் மலைக்
கரசர் நற்பாலன்,
பரிசுத்த தூதர் பணிசெய்யும்
பொற்பாதன்,
மானிடனாக அவ தரித்த தெய்வீகன்,
வல்ல பேயைச்
செயித்த மா மனுவேலன். - பாவியே
2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய,
தேவ கோபாக்கினி
அவர்மீதில் பெய்ய,
தோசம் சுமந்து
இயேசு தேவாட்டுக் குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந்
தாற்றுதல் செய்ய - பாவியே
3. இந்தப் பாத்திரம் என்னை விட்டக லாதோ?
இல்லையானால்
உமது இட்டம் தென்றே
சிந்தை துயரடையச் செப்பினார்
அன்றோ
சுவாமி உனக்காய்ப்
பிணைப்பட்டதால், அந்தோ! - பாவியே
4. கெத்செ மனேயில் இயேசு பட்டதை நினையே;
கேவலமான உன்தன்
பாவத்தை மறவே;
ஆத்தும நேசர் பாதம் ஆவலாய்ப் பணியே;
அன்பின் கரத்தா
லுனை அணைப்பார், நிச்சயமே. -
பாவியே
- திரு. தேவசகாயம் உபாத்தியார், சாட்சியாபுரம்.
Comments
Post a Comment