நான் அழுத போதெல்லாம் என் அருகில் வந்தவரே
நான் அழுத போதெல்லாம் என் அருகில்
வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர்
துடைத்தவரே- 2
1. அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2
உம்மையன்றி எனக்கு யாரு ஐயா - 2 - நான்
அழுத
2. உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2
உதவி செய்பவரும் நீர்தானையா - 2
உம்மை அன்றி எனக்கு யாரையா - 2 - நான்
அழுத
3. உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்ததையா - 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 - நான்
அழுத
இயேசு தான் அவர் இயேசு தான்
- 4
- Nathanael Donald
YouTube Link
Comments
Post a Comment