பாவம் போக்கும் தெய்வம் தான்
பாவம்
போக்கும் தெய்வம் தான்
பரிசுத்த
தெய்வம் தான் -2
இயேசு ராஜன் எங்கள் இயேசு
ராஜன்
1. வாழ்க்கை என்னும் படகிலே இயேசு வந்திடுவார்
கலங்கரை தீபமாய் அவர் இருந்திடுவார்
-2
கலங்கிட வேண்டாம் பயந்திட வேண்டாம் -2
கல்வாரி நாதன் உன்னை கைவிட மாட்டார்
-2
2. சந்தோஷம் சமாதானம் உனக்கு தந்திடுவார்
சத்திய பாதையிலே தினம் நடத்திடுவார்
-2
கூடி வந்திடு தேடி வந்திடு -2
ராஜாதி ராஜன் உன்னை பாதுகாப்பாரே -2
3. வறட்சியான காலத்திலே திருப்தியாக்குவார்
வளமிக்க தோட்டம் போல செழிப்பாக்குவார்
தாமதம் வேண்டாம் தயங்கிட வேண்டாம்
கர்த்தாதி கர்த்தர் உன்னை காத்திடுவாரே
Comments
Post a Comment