15 May 2025

பாவியான என்னையுமே பாவியான என்னையுமே

பாவியான என்னையுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பாவியான என்னையுமே

                    தேடி வந்து மீட்டுக் கொண்டீர்

                        உம் அன்பின் ஆழம் அறியேன்

                        உம் ஜீவன் எனக்குத் தந்து

                        என்னையும் வாழச் செய்தீர்

 

                        உம் அன்பிற்கெல்லை இல்லையே

                        உம் அன்பின் தூய பிரசன்னம்

                        என் உள்ளம் வாஞ்சிக்குதே

                        என்றென்றும் உம்மில் நான் மகிழ

                        என்னையே அர்ப்பணித்தேன்

 

1.          அன்பு தணியும் உலகினிலே

            உமது அன்பு அணைத்திடுமே

            மாறிடாத உமது நேசமே

            நண்பன் போல நெருங்கி வந்து

            என் உள்ளம் புரிந்து கொண்டீர்

            உம் அன்பிற்கிணை இல்லையே

 

2.         தாயின் அன்பு மாறினாலும்

            உந்தன் அன்பு மாறிடாதே

            என்றும் என்னை மறப்பதில்லையே

            உம்மை விட்டு பிரிந்தபோதும்

            எனக்காக (என்னை காண) ஏங்கினீரே

            உம் அன்பு உயர்ந்ததே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...