09 June 2026

இந்த சுவிசேடம் போலெங்கும் அகப்படாது

ஞா.கீ:147

147. இராகம்: காம்போதி                                 ஆதிதாளம் (423)

 

                             பல்லவி

 

          இந்த சுவிசேடம்போ லெங்கும் அகப்படாது

          ஏதோ என் பாக்கியம் இது.

 

                             அனுபல்லவி

 

          விந்தையுடன் புவியோரை மீட்கப் பரன் அன்பாக

            வேதியர்க்கே அளித்தார் மெய்ம்மறை சத்தியமாக,

            விளங்க விபுலகில், கலங்க வலகையும்,

            இலங்க மனுடர்கள்; துலங்க, நாளுமே, - இந்த

 

                             சரணங்கள்

 

1.         ஜாதிகள் யாவரும் சத்தியம் மறையில் சேர,

            சகல பொய்ம் மதங்களும் தரணிதனிலே மாற,

            மேதினி மீதிலெங்கும் மெய் அறிவில் தேற;

            விக்கிரகத்தை உடைக்க, உக்கிரகத்தை ஒழிக்க,

            விக்கினத்தை அறுத்து நுக்ரகத்தை அளிக்க - இந்த

 

2.         இந்நிலமீதி லெங்கும் மிதற்கீடுண்டோ பாக்கியம்?

            இச்சுவி சேஷத்தினால் எவர்க்குமுண்டாம் சலாக்கியம்;

            பன்னிரு சீடருக்கும் பகர்ந்தளித்திட வாக்கியம்

            பாரில் மனுடர் பவம் பரிகரித்திடம் யோக்கியம்;

            பட்சமுடன் திரு ரட்சகரருள் பெறும்,

            இச்சை மிகும்; குரு உச்சிதனே அருள் - இந்த

 

3.         தேசமெங்கும் பெருகி, சீர்கெட்டோர்களை மேவி,

            திடனற்றோர்களைத் தேடி, திவ்ய ஆவியால் ஊதி,

            பாசமுடன் கிறிஸ்தின் பாதம் பணிந்தே தாவி,

            பார்மிசை யாவருமே பவத்தை ஏவி,

            பரத்தின் வழியைக் காட்டும் திறத்தின் கிரீடம் சூட்டும்.

            கருத்தில் பலத்தை நாட்டம், வரத்தினருளால் தேற்றும் - இந்த

 

 

- ஜே.யா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...