66. காகம்: சயிந்தவி. தாளம்: ஆதி.
கண்ணிகள்
1. இந்த இர வில்எமைக் காரும்
- இயேசையாவே நீர்
உந்தன்திருக்
கண்ணாலே பாரும்.
2. சென்ற பகல் முழுதும் நீரே - எங்க ளுக்கொரு
தீமை வராமல் காத்தீர் தேவே.
3. சரீர ஆத்தும நன்மை ஐயா - எல்லாம் உம்மாலே
தட்டின்றி பெற்றுக்
கொள்வோம் மெய்யாய்.
4. இரவில் நித்திரை செய்யும் போதே - காக்கும்
தூதர்கள்
இறங்கிச் சூழச் செய்யும்இப் போதே
5. சுகமான நித்திரையைத்
தாரும் - சாத்தான் சோதனை
துன்பம் வராமலே
தற்காரும்.
6. அக்கினி மோசங்களால்
சேதம் - பொல்லாங்குகள்
அணுகாமல் காத்திடுமே பாசம்.
7. மறுநாள் அதிகாலையைக்
காண - கிருபை செய்யும்
மனுவேல் உமது
பாதம் பூண
8. நெஞ்சம் விழித்து உம்மைக் கெஞ்சும் - சீயோன்
மகளின்
நேயாநீர் இங்கு
வந்து கொஞ்சும்.
9. தாசர் சபையாரின் மன்றாட்டு - ஐயா உமது
சமுகம் வரட்டுமே தாராட்டு.
No comments:
Post a Comment