108. இராகம்: எதுகுலகாம்போதி ஆதிதாளம்
(412)
பல்லவி
இத்தனை
பெருங்குருசை, ஐயா, நீர்
எடுத்தெப்படி
நடப்பீர் துய்யா!
அனுபல்லவி
இத்தரையோர்
வினையறச் சத்தமற்ற ஆடதுபோல்
இடறி தாளுந்
தத்தளித்து வீழ்ந்திட
எழுந்து பதறியே
சடலம் சோர்ந்திட - இத்தனை
சரணங்கள்
1. கொல்கதா பாதையினிற் கூட்டம் அடர்ந்திடவும்;
கொடியோர் நடத்திவரவும்,
நல்மாதரான சிலர்
நாடிப் புலம்பிடவும்
நயமதாகி தோள்கள்
சிவக்கவும்
நாதா, உமக்குப்பின்
சீமோன் சுமக்கவும் - இத்தனை
2. வானா சனத்திலே மாறத நன்மைகளை
மாந்தர் அனுபவித்திட,
ஞானாகரனே, உந்தன்
நற்றாள் கரத்தினிலே
நைய ஆணியினா லிறுக்கவும்,
மெய்யில் பாரமாய்ச் சுமையொறுக்கவும் - இத்தனை
3. ஆவியொடுங்கிடவும்,
அவயவம் நடுங்கிடவும்,
அருள் முகம் வாடிடவும்,
பாவிகளைத் தமது பாரிச[1]மாக்கிடவும்;
பாடுபட வந்த
இரக்க வாசனே
பரமநாதனின்
அருமைச் சேயனே - இத்தனை
- தேவசகாயம் ஆசாரியர்
No comments:
Post a Comment