12 January 2022

இதயத்திலே எனக்கு ஒரு தாகம்

இதயத்திலே எனக்கு ஒரு தாகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இதயத்திலே எனக்கு ஒரு தாகம்

                        இயேசுவே உம்மிடத்தில் தனியாத மோகம்

                        எனக்காக நீர் செய்த எண்ணில்லா தியாகம்

                        இதை நினைந்து உருகி பாடுவேன் கீதம்

 

1.         முப்பது வெள்ளிக்காய் ஆசை வைத்தான் - யூதாஸ்

            உத்தமராம் இயேசுவை காட்டிக் கொடுத்தான்

            அன்பர் சொன்ன வார்த்தை ஏனோ நெஞ்சில் மறந்தான்

            அழியாத ஆக்கினையை தானும் சுமந்தான் - அங்கே

                        தானும் சுமந்தான்

 

2.         வாய்த்திறவா ஆட்டினைப்போல் கொண்டுசென்றீரோ - அங்கே

            வஞ்சகரின் வசைமொழியால் நெஞ்சம் நொந்தீரோ

            நீதிக்காக நிந்தனைகள் தான் சுமந்தீரோ

            நீசன் எந்தன் வாழ்வினுக்காய் பாடடைந்தீரோ - அந்த

                        பாடடைந்தீரோ

 

3.         குற்றமற்ற இரத்தமதை கண்டு மகிழ்ந்தார் - அங்கே

            உறக்கமொழி பேசி உந்தன் முகத்திலு மிழ்ந்தார்

            எனக்காக தேவமைந்தன் மௌனம் கொண்டீரோ

            எனை மீட்க சிலுவையிலே நீர் மறித்தீரே - ஐயா
                        நீர் மறித்தீரே

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...