12 January 2022

ஆகாய மாளிகையில் எந்தன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆகாய மாளிகையில் எந்தன்

                        ஆண்டவர் இருக்கின்றார்

                        அழிந்த மலர்களிலே - அவர்

                        அழகாய் பொழிகின்றார்

 

1.         விந்தையுருவான எழிலே

            புவி மந்தை தினம் காக்கும் குழலே

            எந்தன் குறை தீர்க்கும் பரனே

            உந்தன் வருகை உலகுக்கு அரணே

 

2.         உலகம் உருண்டோடும் பலகை

            அதில் இறைவன் தினம் வரையும் கவிதை

            உன்னை நினைந்தேங்கும் அழுகை

            இந்த உலகம் அருளிய சிலுவை

 

3.         இழந்த உளம் தேடும் விழியே

            என்றும் இழிந்த எனை நோக்கும் ஒளியே

            நலிந்த எனைக் காக்கும் பொருளே

            உந்தன் விழிகள் உலகுக்கு அருளே

 

- ஒய். டேவிட்        

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...