08 June 2013

கரை ஏறி உமதண்டை

நூற்றாண்டு கீதங்கள் 264
கீதங்களும் கீர்த்தனைகளும் 267
நித்திய ஜீவன் பாடல்கள் 542

S.S. 789

1. கரை ஏறி உமதண்டை
    நிற்கும் போது ரட்சகா!
    உதவாமல் பலனற்று
    வெட்கப்பட்டுப் போவேனோ?

                        பல்லவி

        ஆத்துமா ஒன்றும் ரட்சிக்காமல்
        வெட்கத்தோடே ஆண்டவா!
        வெறுங்கையனாக உம்மைக்
        கண்டு கொள்ளல் ஆகுமா?

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
    வைத்திராமல் சோம்பலாய்க்
    காலங்கழித்தோர் அந்நாளில்
    துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
    சாவுக்கஞ்சிக் கலங்கேன்
    ஆயினும் நான் பலன் காண
    உழைக்காமற் போயினேன்!

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
    சென்று போயிற்றே, ஐயோ!
    மோசம் போனேன்!
    விட்ட நன்மை
    அழுதாலும் வருமோ?

5. பக்தரே உற்சாகத்தோடு
    எழும்பிப் பிரகாசிப்பீர்!
    ஆத்துமாக்கள் இயேசுவண்டை
    வந்து சேர உழைப்பீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...