அக்கினி
காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகந் தீர்த்திடும்
ஜீவநதியே
ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே
என்னில் பாய்ந்து செல்லுமே
ஓ... ஜீவ நதியே
1. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே
ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே
2. காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே (2)
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே
ஓ ஜீவ நதியே... என்னில் பாய்ந்து செல்லும்
ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே (3)
3. கரம் பிடித்தவர் கைவிடமாட்டார்
உன்னைக் காப்பவர் உறங்கிட மாட்டார்
உனது பாத்திரம் நிரம்பி வழியும்
சத்துரு முன்னே உயர்த்துவார் (2)
ஓ ஜீவ நதியே...
- Pastor. Lucas Sekar
No comments:
Post a Comment